அது நடந்து ஏறத்தாழ பத்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும் , ஆம் நாங்கள் தோழமையோடு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். தேர்தல் பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. அரசியல்வாதிகளின் கொடுமைகளை மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்களால் முடிந்தவரை கூட்டங்கள் நடத்தினோம். விவாதங்கள் நடத்தினோம். போதுமானதாகத் தெரியவில்லை. நண்பர்கள் கூடினோம். துண்டு துண்டாக காகிதத்தை வெட்டினோம். ஒரு சிறு கவிதை,அதுவும் வேட்பாளரே பேசுவது போல, ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து எழுதத்துவங்கினோம். ஆயிரக்கணக்கில் தயார் பண்ணிவிட்டோம். எங்கள் பகுதியில் தெருமுனையில் நின்று போவோர் வருவோர்கெல்லாம் விநியோகம் செய்தோம். உண்மையிலேயே அது அப்போது நடந்த தேர்தலில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்தக் கவிதை இதோ...
எனக்கு வாக்களித்து
நான்...
கொள்ளையடிப்பதற்கும் ..
கொலை செய்வதற்கும் ..
சாதி , மத ,பேதங்களைத் தூண்டி
தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் திளைத்து -
உங்களை ஓட்டாண்டியாக்க
எனக்கு அங்கீகாரம் அளியுங்கள்.
--உங்கள் தொகுதி வேட்பாளர்.
உங்கள் சின்னம். திருவோடு.
அறிவுச் சுடர் நடுவம்,
மதுரை.
Sunday, March 14, 2010
Friday, March 12, 2010
திரளுவோம் ...
திண்ணியத்தில் மலம்தின்னவைக்கிறான் ...
திருச்சியில் மாநாடு !
ஊஞ்சனையில் வன்சாதிக்கொடுமைகள் ...
மதுரையில் ஊர்வலம் !
முதல் தெருவில் துரத்தும் நாய்க்கு ...
மூன்றாம் தெருவில் கல்லெறியா?
ஒரு நாளும்
ஒரு நாயும்
அடிபடாது !
மலம் ஊட்டியவன் வலம் வருகிறான் - வெ(ற்)றியுடன்!
பலியானவன் கைதாகிறான் !
தேசத் துரோகியாய் .....
தீவிரவாதியாய் ....!
பகுத்தறிவைக் கேவலமாக்கும் இந்தப்
பட்டறிவு போதும் இனிநமக்கு ..!
வழிமுறையைத் திருத்துவோம் ...
நடைமுறையால் மிரட்டுவோம் ...
சாதித்திமிரை ஒடுக்குவோம்.
ஆம்.
முதற்கட்ட முயற்சியாய்.........
தின்னவைத்த அதே மலத்தை
தொட்டி தொட்டியாய் இழுத்துவந்து
ஆதிக்க சாதியின் அத்துனை தெருக்களிலும்
சிதறிஎறிவோம் ..!
அதன்பிறகும் அதுபோல
எங்கேனும் நடந்தால் .....
தின்ன வைத்தவனைத்
தின்ன வைப்போம் ..
ஆயிரம்பேராய்த் திரண்டுபோய் .
அப்போது கைதானால் பெருமைகொள்வோம்.
நாம்..
பகுத்தறிவுவாதிகளென்றும் .
வீரம் செரிந்தவரென்றும்...
திருச்சியில் மாநாடு !
ஊஞ்சனையில் வன்சாதிக்கொடுமைகள் ...
மதுரையில் ஊர்வலம் !
முதல் தெருவில் துரத்தும் நாய்க்கு ...
மூன்றாம் தெருவில் கல்லெறியா?
ஒரு நாளும்
ஒரு நாயும்
அடிபடாது !
மலம் ஊட்டியவன் வலம் வருகிறான் - வெ(ற்)றியுடன்!
பலியானவன் கைதாகிறான் !
தேசத் துரோகியாய் .....
தீவிரவாதியாய் ....!
பகுத்தறிவைக் கேவலமாக்கும் இந்தப்
பட்டறிவு போதும் இனிநமக்கு ..!
வழிமுறையைத் திருத்துவோம் ...
நடைமுறையால் மிரட்டுவோம் ...
சாதித்திமிரை ஒடுக்குவோம்.
ஆம்.
முதற்கட்ட முயற்சியாய்.........
தின்னவைத்த அதே மலத்தை
தொட்டி தொட்டியாய் இழுத்துவந்து
ஆதிக்க சாதியின் அத்துனை தெருக்களிலும்
சிதறிஎறிவோம் ..!
அதன்பிறகும் அதுபோல
எங்கேனும் நடந்தால் .....
தின்ன வைத்தவனைத்
தின்ன வைப்போம் ..
ஆயிரம்பேராய்த் திரண்டுபோய் .
அப்போது கைதானால் பெருமைகொள்வோம்.
நாம்..
பகுத்தறிவுவாதிகளென்றும் .
வீரம் செரிந்தவரென்றும்...
நான் ...
கவிஞனில்லை கவிபாட
அரசியல் அறிஞனில்லை
தத்துவம் சொல்ல - சிறு
சேதியொன்று சொல்வதற்கே
சிங்கார வரிகள் செய்து -பல
சிந்தனைகள் செருகி வைத்து -தமிழ்
வார்த்தைகளால் விளையாட -வைர
முத்துவும் தான் இல்லை நான்!
ஆனாலும்...
ஆற்றுப்பெருக்காய்
ஊற்றெடுக்கும் உற்சாகத் திமிரும்,
காட்டுத்தீயாய்
கட்டித்தாவும் கற்பனையும்
அகண்ட கடலின் ஆழம் போல்
அடங்காத் திரியும் வேழம் போல்
அசாத்திய தன்னம்பிக்கையும் கொண்டு ...
சிறுகச் சிறுக
சேர்த்துச் சேர்த்து
எனக்குள் நானே
செதுக்கிக் கொண்ட- மிகச்
சாதாரண மனிதன் நான்.
கற்றவை வித்தையென்றால்
கவிதை போல் கத்திவிடலாம்.
ஏன் மெட்டுக் கூட கட்டி
பாடியும் விடலாம்.
ஆனாலும்...
பட்ட அனுபவங்களின்
சுட்ட உண்மைகளை - என் மீது
புடமாய்ப் போட்டுப் போட்டு
பட்டைகளாய்த் தட்டித் தட்டி
அதிர்வுகளாய்...ஆனந்தங்களாய்...
அனைத்து நரம்புகளிலும்
உள்வாங்கிய
அழகுகள் அவையல்லவா ?
கண்ணாடியால் கட்டிடங்கள்
கட்டிக் கட்டி உயர்ந்து உயர்ந்து
கற்பனையில் மாய்ந்து போகும்
மானுடர்கள் மத்தியிலே
ரத்தத்திலே அன்பைத் தோய்த்தெடுத்து-அதில்
உணர்வுகளை உருக்கி ஊற்றி
வைரமாய் என் மனத்தை
வடித்தல்லவா வைத்திருக்கிறேன் !
ஆனாலும்...
எதிர்படும் ஒளியைப்
பன்மடங்கொளியாய்
எதிராய் ஒளிப்பேன்
என்பதைத் தவிர என்னிடமென்ன ...?
நான் ஒரு கரிதான்!
அரசியல் அறிஞனில்லை
தத்துவம் சொல்ல - சிறு
சேதியொன்று சொல்வதற்கே
சிங்கார வரிகள் செய்து -பல
சிந்தனைகள் செருகி வைத்து -தமிழ்
வார்த்தைகளால் விளையாட -வைர
முத்துவும் தான் இல்லை நான்!
ஆனாலும்...
ஆற்றுப்பெருக்காய்
ஊற்றெடுக்கும் உற்சாகத் திமிரும்,
காட்டுத்தீயாய்
கட்டித்தாவும் கற்பனையும்
அகண்ட கடலின் ஆழம் போல்
அடங்காத் திரியும் வேழம் போல்
அசாத்திய தன்னம்பிக்கையும் கொண்டு ...
சிறுகச் சிறுக
சேர்த்துச் சேர்த்து
எனக்குள் நானே
செதுக்கிக் கொண்ட- மிகச்
சாதாரண மனிதன் நான்.
கற்றவை வித்தையென்றால்
கவிதை போல் கத்திவிடலாம்.
ஏன் மெட்டுக் கூட கட்டி
பாடியும் விடலாம்.
ஆனாலும்...
பட்ட அனுபவங்களின்
சுட்ட உண்மைகளை - என் மீது
புடமாய்ப் போட்டுப் போட்டு
பட்டைகளாய்த் தட்டித் தட்டி
அதிர்வுகளாய்...ஆனந்தங்களாய்...
அனைத்து நரம்புகளிலும்
உள்வாங்கிய
அழகுகள் அவையல்லவா ?
கண்ணாடியால் கட்டிடங்கள்
கட்டிக் கட்டி உயர்ந்து உயர்ந்து
கற்பனையில் மாய்ந்து போகும்
மானுடர்கள் மத்தியிலே
ரத்தத்திலே அன்பைத் தோய்த்தெடுத்து-அதில்
உணர்வுகளை உருக்கி ஊற்றி
வைரமாய் என் மனத்தை
வடித்தல்லவா வைத்திருக்கிறேன் !
ஆனாலும்...
எதிர்படும் ஒளியைப்
பன்மடங்கொளியாய்
எதிராய் ஒளிப்பேன்
என்பதைத் தவிர என்னிடமென்ன ...?
நான் ஒரு கரிதான்!
Saturday, January 23, 2010
Thursday, December 3, 2009
பார்வை...
மனம் விரும்புவதோ வானளாவிய விஷயங்கள் .....
ஆனால் அதில் ஐந்து சதவீதம் கூட
நடைமுறைபடுத்த முடியவில்லை ....
இப்படியே எல்லோரும் வாழ்ந்து வந்திருந்தால் . . .
உலகம் இவ்வளவு முன்னேறி இருக்குமா . . . . ? ? ?
அப்படியானால் நமது வாழ்க்கை பற்றிய நமது பார்வை
இன்னும் சரியாக இல்லை தானே . . . ? ? ? ?
ஆனால் அதில் ஐந்து சதவீதம் கூட
நடைமுறைபடுத்த முடியவில்லை ....
இப்படியே எல்லோரும் வாழ்ந்து வந்திருந்தால் . . .
உலகம் இவ்வளவு முன்னேறி இருக்குமா . . . . ? ? ?
அப்படியானால் நமது வாழ்க்கை பற்றிய நமது பார்வை
இன்னும் சரியாக இல்லை தானே . . . ? ? ? ?
Sunday, November 22, 2009
நான்
நான் நானாக இருப்பதற்கு இன்னும் கூட பழகவில்லை .,
ஆனால் நீ நீயாக இரு என்று நான் உனக்கு சொல்லுகிறேன் .,
இது தான் வாழ்வின் வினோதம் .
Subscribe to:
Comments (Atom)